fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாநகராட்சியை குப்பை யில்லா மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மேயர் ந.தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாநகராட்சி அலுவலகம் முதல் திருப்பூர் குமரன் நினைவிடம் வரை பேரணி நடந்தது. மேலும் “எனது நகரம் எனது பெருமை,என் குப்பை என் பொறுப்பு” எனும் தலைப்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்டல தலைவர் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம், கோவிந் தராஜ் சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன் அவர்களும் வட்ட கழக செயலாளர்கள் முகமது ரபிக் நேதாஜி கண்ணன் மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img