திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ்நாரணவரே பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேற்று (18ம் தேதி) செய்தியாளர்கள் பயணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டப் பணிகள் முழுமையாக பொது மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றையதினம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கபுரம் ஊராட்சி, அம்மாபாளையம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகள், மாணிக்காபுரம் ஊராட்சி அண்ணாமலை கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின்கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஈட்டி, குயில், கடம்பூ, வேங்கை, மாகக்கனி, சீத்தா, செண்பகம் உள்ளிட்ட மரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை மற்றும் கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின்கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சுக்கம்பாளையம் ஊராட்சி, ஊஞ்சப்பாளையத்தில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 2 வீடுகள், செம்மிபாளையம் ஊராட்சி, செம்மிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுவரும் வேளாண் சேமிப்பு கிடங்கு, தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டும்பணி, செம்மிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தமிழ்நகர் ஓடைபகுதியில் ரூ.21.51 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.2.41 லட்சம் மதிப்பீட்டில் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதியில் 1மற்றும் 3-வது குறுக்கு வீதிகளில் சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைக்கும்பணி, பருவாய் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.17.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கணினிஆய்வகம் கட்டும்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.4.54 லட்சம் மதிப்பீட்டில் பெரியதோட்டம் குட்டை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிய ப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மனிஷ்நாரணவரே தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலுச்சாமி, பானுப்பிரியா, உதவி பொறியாளர் செந்தில் வடிவு மற்றும் செய்தியாளர்கள், துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



