திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவில், தமிழக அரசின் மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கும் வகையில் தானியங்கி மஞ்சள் பை எந்திரம் அமைக் கப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மலை கோவில் முகப்பு வாசலில் அமைக்கப் பட்டிருந்த தானியங்கி மஞ்சள் பை எந்திரத்தை, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எம் எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாலை மற்றும் பூஜை பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வருவதால் மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இனிமேல் கோவிலுக்குள் துணிப்பையைத் தவிர வேறு பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வெளி யிட்ட கோவில் நிர்வாகம் வெளியூர்களில் இருந்து வரும் பொது மக்களுக்கு துணிப்பை வழங்கும் வகையில் கோவில் வாசலில் தானியங்கி துணிப்பை வழங்கும் எந் திரத்தை வைத்துள்ளனர்.
தமிழக அரசின் மாசு கட்டுப் பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த எந்திரத்தில் இரண்டு ஐந்து ரூபாய் காசுகள் அல்லது ஒரு பத்து ரூபாய் காசு போட்டால் ஒரு மஞ்சள் பை வரும். அதனை எடுத்துமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எந்திரத்தை அர்த்த நாரீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திருச் செங்கோடு சட்டமன்ற உறுப் பினர் ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அர்ப்பணித் தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் காசுகள் போட்டு பைகளை எடுத்துச் சென்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், திருச்செங்கோடு நகர திமுக செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான கார்த்திகேயன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த் திகேயன் பிரபாகரன் அருணாசங்கர் அர்ஜுனன் ஆகி யோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் பலரும் கலந்து கொண்டனர்.