தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO), ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவனமான தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systemes) உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (TANCAM) ஒன்றை உருவாக்கி இயக்கி வருகிறது.
தசோ சிஸ்டம்ஸ்
இதன் வழியாக தசோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் செயலாக்க மென்பொருளான 3D EXPERIENCE தளத்தை சிறு, குறு நிறுவனங்களின் பயன்பாட்டிற்குத் தகுந்த வண்ணம் பயிற்சியளித்து வருகிறது.
கோவை கொசிமா(COSIEMA) அமைப்பின் தலைவர் நல்லதம்பி, துணைத்தலைவர் நடராசன் மற்றும் செய லாளர் லோகநாதன் முன்னெடுப்பில், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (TANCAM) மற்றும் தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systemes) நிறுவனத்தின் மென் பொருள் திறனாளர்களின் மூன்று மணி நேர பயிலரங்கமான “Evolution, Intelligence and Advancement in manufacturing”, கோவை கொசீமா அரங்கில், நடந்தது.
சிறு, குறு நிறுவனங்க ளின் வளர்ச்சியில், நவீன தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், அதில் தசோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருளான 3D EXPERIENCE தளத்தின் பங்களிப்பையும் மிக விரிவாக திறனாளர்கள் விஜயதீபன், சுனில் ஆகி யோர் விளக்கினர்.
நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களின் நிறுவனர்களும், கல்லூரி மாணவ, ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
கோவை கொசீமா அமைப்பின் வழி ஒரு துணை மையம் (Spoke Centre) அமைத்து தசோ மென்பொருளை சிறு, குறு நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் அவசியத்தை பங்கேற்றோர் வலியுறுத்தினர்.