பல உணவு வகைகளுக்கு நன்கு அறியப்பட்ட பெங்களூரின் பிரபல ‘டைகூன்ஸ்’ உணவகம், அழகிய மலைவாசஸ்தலமான உதகையில் உள்ள ‘அயடனா’வில் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் இன்பாண்ட்ரி சாலையில் தொழில்துறையின் மூத்த தலைவரான டெஸ்மண்ட் ரைஸ் துவக்கிய டைகூன்ஸ், 90-களில் இருந்து பல உணவு வகைகளுக்காக உணவு ஆர்வலர்களை வசீகரித்துள்ளது.
தற்போது ஒரே டைகூன்ஸ் அவுட்லெட் 1080, 1-வது தளம், 12-வது மெயின் ரோடு, எச்ஏஎல் 2-வது ஸ்டேஜ், அப்பாரெட்டி பாளையா, இந்திரா நகரில் உள்ளது. உதகையில் டைகூன்ஸ் உணவகத்தின் இரண்டாவது இடமாக, வெல்கம்ஹெரிடேஜ், அயடனா, முட்டிநாடு, இருக்கும்.
உணவுப் பிரியர்களை ஒரு ஏக்கம் நிறைந்த பயணத்திற்கு அழைத்துச் செல்வதற்கும், நேர்த்தியான பல உணவு வகைகளை வழங்குவதற்கும் உதகையின் டைகூன்ஸ் உணவகத்தின் சூழல் கவனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உணவு வகைகள் ஆசிய கண்டம் முழுவதிலும் உள்ள சமையல் பாணியால் ஈர்க்கப்பட்டு, பலவிதமான நுட்பங்கள் மற்றும் சுவைகளுடன் சிறந்த சேவை அமைப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது.
மிகவும் நிதானமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை போன்ற சுவை மற்றும் பொறுமையாக ருசித்து சாப்பிடும் நல்ல அனுபவம் உணவுப் பிரியர்களுக்கு இங்கு கிடைக்கும்.
டைகூன்ஸ், துவக்க விழாவில், ரைஸ் கூறியதாவது: எனது 50 ஆண்டுகால விருந்தோம்பல் துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றியதன் அனுபவம் மூலம், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டதால், அசல் தன்மையின் வேர்களை இழக்காமல் தரமான சேவை மற்றும் உணவை வழங்கும் அனுபவம் ஆகியவற்றின் உச்சக்கட்டமாக டைகூன்ஸ் திகழ்கிறது. ஒரு குழுவாக நாங்கள் எப்போதும் சிறந்த சேவையை வழங் குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
டைகூன்ஸ், ஊட்டி தொடங்கியதில் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த தரமான உணவை வழங்கி மக்களிடம் சிறந்த உணவகம் என்ற பெயரை பெறுவோம் என்றார்.