வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த முகாம்களில் வேலைவாய்ப்பு பெற்றமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு பயனாளிகள் நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
“மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்கள் அரசுப்பணிகளைப் பெற உதவும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அரசு துறைகளில் வேலை பெற இளைய சமுதாயத்தினரை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகுப்புகள் ஒருபுறம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, மற்றொரு புறம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கு ஏதுவாக இதுபோன்ற பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் இத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில், 22-&08&-2026 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் இரத்தினம் குளோபல் நிகர் நிலைப்பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
இந்த முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க..விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,266 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்குமார், வேலைவாய்ப்பு பெற்றமைக்கு தனது நன்றியினை முதலமைச்சருக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நான் பி.இ. படித்து முடித்துள்ளேன். நான் ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கோவை ஆனைமலை டொயோட்டா நிறுவனத்தில் மாதம் ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் பணிநியமன ஆணையிணை பெற்றேன்.
இது எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை வேலை தேடுபவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு முகாம் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட அகில்பிரியா கூறியதாவது:

நான் பொள்ளாச்சியில் வசித்து வருகிறேன். நான்MA., B.Ed. English Literature படித்து முடித்துள்ளேன். நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. நான் பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி இரத்தினம் குளோபல் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு சமர்த்தனம் தொண்டு நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பணிநியமன ஆணை பெற்றேன். இது எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் மகழ்ச்சியாக உள்ளது. மேலும், ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான திறன் மேம்பாடு பயிற்சிக்கும் விருப்பம் தெரிவித்துள்ளேன். இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து இளைய சமுதாயத்தினர் பயன்பெறவும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும், எனது மனமார்ந்த நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொகுப்பு:
ஆ.செந்தில்அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.



