Homeபிற செய்திகள்சிறப்புக் குழந்தைகளுக்கு இன்பச் சுற்றுலா

சிறப்புக் குழந்தைகளுக்கு இன்பச் சுற்றுலா

ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தின் ஒரு அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்று வரும் சுமார் 100 சிறப்புக் குழந்தைகள் இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காகவும், புதிய இடங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கிலும் பெருந்துறை அருகேயுள்ள ‘சில்-அவுட்’ தீம் பார்க்கிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு குழந்தைகள் பல்வேறு விளை யாட்டு களில் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். அவர்களுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட மொத்தம் சுமார் 250 பேர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img