கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. யுனைடெட் கல்வி குழும தலைவர் டாக்டர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு இன்டெக்ராமைண்ட்ஸ் நிறுவன நிறுவனர் டாக்டர் லவனம் அம்பல்லா கலந்து கொண்டு, 260 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தரவரிசையில் மேலாண்மை துறையில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற கௌரிசங்கருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தரவரிசையில் இடம்பிடித்த 6 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பலர் கலந்து கொண்டனர்.



