கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் அ. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மேலாண்மைப் பள்ளி பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஆர். மேரி மெட்டில்டா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கோவை மண்டல மனிதவளத் தலைமை அதிகாரி தினேஷ் குமார் கலந்து கொண்டு மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் புதிய திறன்களை தொடர்ந்து வளர்த்துக்கொள்வது குறித்து பேசினார். நன்றியுரையை எம்.பி.ஏ. மாணவி என். ஹர்ஷிதா வழங்கினார்.



