வாழும் கலை அமைப்பின் கோவை கிளை சார்பில், பள்ளிகளுக்கிடையேயான பஜனை பாடும் நிகழ்வான “ஸ்வர தாரங்கிணி” நேற்று (21-ம் தேதி )காலை கோவை நவஇந்தியா அருகே உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் பல் வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து வாழும் கலை அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- பஜனை குழுவாகப் பாடுவது மூளையின் இரு பகுதியையும் சமநிலைப் படுத்துவதுடன், சுவாச மண்டல செயல்பாட்டை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயன்களும் உள்ளதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வு குழந்தைகளிடையே பஜனை பாடு வதில் ஆர்வத்தை ஏற்ப டுத்துவதுடன், குழு இசையின் மூலம் இந்திய மரபு, கலாச்சாரம் மற் றும் ஆன்மீக மதிப்புகளை அனுபவிக்கச் செய்வதே நோக்கமாகும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.
இந்தப் போட்டிகள் இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஜூனியர் பிரிவில் 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களும், சீனியர் பிரிவில் 13 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 6 பேர் வரைஇடம் பெற்றிருந்தார்கள்.
முடிவில்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழக்கப்பட்டன.



