இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனேவின் பந்தர் செரி பேகவான் நகருக் குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறி வித்திருக்கிறது.
ராயல் புரூனே ஏர்லைன்ஸின் ஏர்பஸ் A320நியோ விமானம், 2024 நவம்பர் 5ம் தேதியன்று சுமார் 22:50LT மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் முதன் முறையாக வந்து இறங்கியபோது விமானத்தின் மீது இரு பக் கங்களிலிருந்தும் நீரைப்பாய்ச்சி பாரம்பரியமான வரவேற்பு வழங்கப்பட்டது.
புதிய விமானச் சேவை அறிமுகத்தை இந்தியாவிலுள்ள புரூனே ஹை கமிஷன், புரூனே பொருளாதார மற்றும் மேம்பாடு வாரியம் (BEDB) மற்றும் புரூனே டூரிஸம் (BT) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு, சென்னையிலுள்ள ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இவ்விமான நிறுவனம் கொண்டாடியது. இரு நாட்டு கூட்டாண்மை உறவுகளை வலுப்படுத்த வேண்டுமென்ற குறிக் கோளோடு இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ராயல் புரூனே ஏர் லைன்ஸின் தலைமை செயல் அதிகாரி கேப்டன் சபிரின் பின் பியி அப்துல் ஹமீது பேசுகையில், “இந்த புதிய வழித்தடத்தின் தொடக்கம் என்பது வெறுமனே ஒரு விமான சேவை மட்டுமல்ல. இரு நாடுகளுக்கு இடையி லான ஒரு பாலம்“ என்றார்.