வீரபாண்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபார்டு வங்கி நிதி உதவியிடன் PACCS.ASMSC திட்டத்தின் மூலம் ரூ.2150 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, கோயம்புத்தூர் சரக துணைப்பதிவாளர் தினேஷ்குமார், சங்கத்தின் செயலாட்சியர் வாணி செல்வராஜ், கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் விமல்ராஜ், பேரூராட்சி தலைவர் பத்மாவதி, பேரூராட்சி துணைத்தலைவர் இனியராஜ், பேரூராட்சி உறுப்பினர் திவ்யா, கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



