கடந்த 23 ஆண்டுகளாக நீர் நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கோவை சிறுதுளி அமைப்பு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சென்னை சோழிங்க நல்லூர் ஏரி மறுசீரமைப்பு திட்டத்தை வெற்றிகர மாக நிறைவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி, நீர்வ ளத்துறை மற்றும் பிற அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப் பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னையின் முக்கிய நகர்ப்புற நீர்நிலைகளில் ஒன்றான சோழிங் கநல்லூர் ஏரி, பல ஆண்டுகளாக மண் தேக்கம், நீர் சேமிப்பு திறன் குறைதல், நீர்தர பாதிப்பு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பு போன்ற சவால்களை எதிர் கொண்டது. இதன் காரணமாக ஏரியின் நீர் சேமிப்பு திறன் சுமார் 150 மில்லியன் லிட்டராக மட்டுமே இருந்தது.
இந்த நிலையை மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின் மூலம் ஏரியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, நீர் சேமிப்பு திறன் சுமார் 150 மில்லியன் லிட்டரி லிருந்து 300 மில்லியன் லிட்ட ராக உயர்த்தப்பட்டுள்ளது. அகற் றப்பட்ட மண்ணை பயன்படுத்தி ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்ட துடன், மழைநீர் வருகை மற்றும் நீர் சேமிப்பை மேம்படுத்தும் வகையில் ஷட்டர் அமைப்பும் நிறு வப்பட்டுள்ளது.
மேலும், ஏரி மற்றும் கால்வாய்களில் வெட்டிவேர், கன்னா உள் ளிட்ட தாவரங்கள் நடப்பட்டு இயற்கை சுத்திகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உயிரினப் பன்மையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு உயிரியல் தீவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏரி கரைகள் மற்றும் சுற்றுப்புறங் களில் விரிவான மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
திட்டத் தொடக்க விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை மாநகராட்சி (தெற்கு) பிராந்திய துணை ஆணையர் அஃப்தாப் ரசூல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சென்னை வளர்ச்சி மைய தலைவர் அனில் குமார், மூத்த துணைத் தலைவர் நிலாத்ரி பிரசாத் மிஷ்ரா உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சிறுதுளி அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மறுசீரமைப்பு பணிகளின் விளைவாக ஏரியின் நீர்தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு முன் மற்றும் பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 98 சதவீத நீராதார முன்னேற்றம் பதிவாகியுள்ளது.
மேலும், ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர் மீள்நிரப்புதல் திறன் மேம்பட்டு, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் மற்றும் நீர்தரம் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினப் பன்மை பாதுகாப்பு, இயற்கை வாழ்விடம் உருவாக்கம் மற்றும் நகர்ப்புற பசுமை வளர்ச்சிக்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும்.
நீர்வள மேலாண்மை, கழிவுநீர் கட்டுப்பாடு, உயிரினப்பன்மை பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்ட ஷோளிங்கநல்லூர் ஏரி மறுசீரமைப்பு திட்டம், நகர்ப் புற நீர்நிலை பாதுகாப்பில் ஒரு முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது.
இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற உறுதுணையாக இருந்த இன்ஃபோசிஸ் லிமிடெட், சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, அரசு துறைகள், அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர் களுக்கும் சிறுதுளி அமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.



