யங் இந்தியன்ஸ் திருப்பூர் மற்றும் தி பெண் கலெக்டிவ் தன்னார்வ நிறுவனம் ஒருங்கிணைந்து, “அடிமட்டம் முதல் அரசாங்கம் வரை – பெண்களின் அரசியல் தற்சார்புகான வழிகள்” என்ற தலைப்பில் பெண்களுக்கான அரசியல் கலந்துரையாடல் பயிற்சியை திருப்பூரில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தியது.
இந்த அமர்வில் அரசியல் சிந்தனையாளர் ஷிவாஞ்ஜலி காம்ப்ளே பெண்கள் சரியான புரிதலுடன் அரசியல் உலகில் அடியெடுத்து வைப்பதற்கான தீவிரமான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெண்கள், அரசியல் இரண்டும் இரு துருவங்களாக தனித்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் பெண்களின் அரசியல் பங்களிப்பை மேம்படுத்த விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியமாகிறது என பேசப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



