தாயகம் டிரஸ்ட் மகளிர் கூட்டமைப்பின் 15ம் ஆண்டு விழா அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி தாயகம் டிரஸ்ட், தூத்துக்குடி மாநகராட்சி முத்தையாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பு 15 ஆம் ஆண்டு மகளிர் தின விழா தூத்துக்குடி முத்தையாபுரம் மரியம் மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று மகளிர் குழு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயக்கனி விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி நீதி குழும உறுப்பினர் உமாதேவி மற்றும் மாநகராட்சி சமுதாய அமைப்பாளர் சரவணபவமா, பிரகாசபுரம் நகர கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் அஜிதா வின்சி, மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் காசிகனி மற்றும் மருத்துவர் இந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளை பட்டுக்கனி, கலைசித்ரா, கவிதா தேவி ஆகியோர் செய்து இருந்தார்கள்.
விழாவில் மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருண் குமார், முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், பகுதி துணை செயலாளர் தீபக்குமார், கல்யாண சுந்தரம் கலந்து கொண்டனர்.



