கோவை அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ரோட் டரி சர்வதேச மாவட்டம் 3201 ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் “நில் மற்றும் நட 3024” நிகழ்வில் 100 மாற்று திறனாளிகள் குழந்தைகளுக்கு வீல் சேர் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற விழாவிற்கு சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுனர் ரோட் டேரியன் ஏ.எஸ்.கே. என்.சுந்தரவடிவேலு தலைமை விருந்தினராக பங்கேற்றார். விழாவில் திட்டத்தின் தலைவரும், ரோட்ராக்ட் மாவட்ட இளைஞர் சேவை தலை வருமான காட்வின் மரிய விசுவாசம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.
இந்த விழாவில் பல்வேறு சிறப்பு அழைப் பாளர்கள், துணை கவர் னர் ரோட்டேரியன் எம்டி தேவதாஸ் மேனன், ஜிஜிஆர் ரோட்டேரியன் எம்டி அஸ்வின், ரோட் ராக்ட் மாவட்ட பணி யாளர்கள், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் தலைவர் ரோட்டேரியன் எஸ்.சியாம் சங்கர், செயலாளர் அட்வ கேட் ரோட்டேரியன் எஸ் ராமகிருஷ்ணன், ஆன்ஸ் தலைவர் சுகன்யா, ஆன்ஸ் செயலாளர் ஐஸ் வர்யா, இன்ட்ராக்டா தலைவர் கருதி அருள் ஆனந்தி, இன்ட்ராக்டர் செயலாளர் ரிச்சல்லா காட்வின், ரோட்டரி கிளப் டவுன் டவுன் குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண் டனர்.