தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நெல்லை திருமண்டல உப தலைவர் ரெவ. சுவாமி தாஸ் தலைமையில் நடைபெற்றது
வடக்கு சபை மன்ற தலைவர் ரெவ. இஸ்ரேல் தனசிங், சேகர தலைவர்கள் ரெவ. கென்னடி, ரெவ் இம்மானுவேல், ரெவ. ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் வரவேற்றார்.
சாந்தபுரம் சேகர தலைவர் ஸ்டேன்லி இ ம்மானுவேல் ஆரம்ப ஜெபம் செய்தார், மாணவ ஆசிரியர் கவிபிரியா வேதபகுதி வாசித்தார், திருநெல்வேலி திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு கிறிஸ்துமஸ் செய்தி அளித்து பரிசுகள் மற்றும் ஆசி வழங்கினார்.
திருமண்டல பொறியாளர் செல்வகுமார், நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி தாளாளர் ஜேசு ஜெகன், பள்ளி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ராஜேந்திரன், திருமண்டல நிர்வாக குழு உறுப்பினர்கள் மெல்கி, தாமஸ், தென்காசி சைரஸ், புதுச்சுரண்டை சேகர செயலாளர் ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா, பொறியாளர் பிரசாந்த், கிருபாகரன், செல்வகு மார், ஆபிரகாம், சாலமோன், ஜெயசந்திரன், பூமணி, கல்லூரி பேராசிரியர்கள் ஷீலா, முத்துலட் சுமி, லீதியாள் சொர்ண ஜெயா, ஜெனிபர், அனிதா, எப்சி, நூலகர் டாக்டர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக் அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன முடிவில் தாளாளர் ராஜகுமார் நன்றி கூறினார். மாணவ ஆசிரியர் மன்சூரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.



