கோவை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் புவனேசுவரி, தமிழ்வளர்ச்சித்துறை பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.