இது தமிழ்நாடு சிறுபான்மையினர் தொழில் முன்னேற்ற கழகத்தின் மூலம் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் TAMCO மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் தற்போது வரையில் 5 மகளிர் குழுக்களைச் சார்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனிநபர்களுக்கும் ரூ.44.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் 07.05.2021 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக புதிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சமுதாயத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன்களில் அவர்களுக்குரிய பங்கீடு கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு மாநிலமானது நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது.
சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு முதல்வர் தலைமையிலான அரசு செயல்படுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் TAMCO (டாம்கோ) மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், சமணர்கள் ஆகியோர் பயன் பெறும் வகையில் சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கி வருகிறது.
அதன்படி 2021-2022-ம் நிதியாண்டில் 2022 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக 4025 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.22 கோடியே 74 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறுபான்மையினர் தொழில் முன்னேற்ற கழகத்தின் மூலம் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்TAMCO மூலம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் தற்போது வரையில் 5 மகளிர் குழுக்களைச் சார்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனிநபர்களுக்கும் ரூ.44.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
“குடும்பத் தேவைகள் பூர்த்தி”
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் புதுக்கண்டிகை சயனபுரம் மதுரா, மசூதி தெருவைச் சார்ந்த மகளிர் சய உதவிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்ததாவது:
எங்கள் குழுவின் பெயர் சூரியன் மகளிர் சுய உதவிக் குழு. 2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. குழுவில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை கடனுதவிகள் பெற்று அதனை முறையாக செலுத்தினோம். பின்னர், தமிழ்நாடு சிறுபான்மையினர் தொழில் முன்னேற்றக் கழகத்தின் மூலம் பள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தமாக 14 உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் கடனுதவி பெற்று துணி வியாபாரம், ஆடு மாடு வளர்ப்பு, விவசாயம், பழைய இரும்புக்கடை மற்றும் பாத்திரம் உற்பத்தி செய்து, விற்பனை ஆகிய தொழில்கள் செய்து வருகிறோம். இந்த தொழிலின் மூலமாக நாங்கள் வெளியில் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எங்களின் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும், பிள்ளைகளின் கல்வி செலவிற்காகவும் யாரையும் எதிர்பாக்க வேண்டியதில்லை.
எங்களால் சுயமாக சம்பாதிக்க முடிகிறது. எங்களைப் போன்ற பெண்களாலும் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ இந்த வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கு குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
“கடையை விரிவுபடுத்தினேன்”
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தண்டலம் ஊராட்சியைச் சார்ந்த பயனாளி தெரிவித்ததாவது: என் பெயர் பி.ஜெய்னுலாப்தின். 2000-ம் ஆண்டு முதல் இராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை பகுதியில் 2 நபர்களைக் கொண்டு கிரேட் ஹோட்டல் என்ற உணவகம் நடத்தி வருகிறேன்.
கடையை விரிவுப்படுத்தலாம் என நினைத்திருந்த நிலையில் முதலீட்டு நிதியில்லாமல் இருந்து வந்தேன். இந்நிலையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் தொழில் முன்னேற்றக்கழகத்தின் மூலம் இராணிப்பேட்டை கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி பெற்று கடையினை மேம்படுத்தினேன்.
தற்போது 50 நபர்கள் அமரும் வகையில் 9 தொழிலாளிகளைக் கொண்டு கடை நடத்தி வருகிறேன். இதன் மூலம் என் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடிகிறது. வாங்கிய கடனையும் வங்கியில் தவணை தவறாமல் செலுத்தியும் வருகிறேன்.
வங்கியில் குறைந்த வட்டிவீதத்தல் கடனுதவி வழங்கி எங்களைப்போன்றோர் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றமடைய வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கு நன்றி என்றார்.
“நல்ல முன்னேற்றம்”
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் புதுக்கண்டிகை சயனபுரம் மதுரா, மசூதி தெருவைச் சார்ந்த மகளிர் சய உதவிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்ததாவது:
குழுவின் பெயர் ஸ்டார் மகளிர் சுய உதவிக் குழு. 2016 -ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. குழுவில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளனர். ஏற்கனவே கடனுதவிகள் பெற்று அதனை முறையாக செலுத்தினோம்.
பின்னர், எங்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் தொழில் முன்னேற்றக் கழகத்தின் மூலம் பள்ளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தமாக 14 உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் கடனுதவி பெற்று துணி வியாபாரம், ஆடு மாடு வளர்ப்பு, விவசாயம், பழைய இரும்புக்கடை மற்றும் பாத்திரம் உற்பத்தி செய்து விற்பனை, ஸ்டார் ஹோட்டல் என்ற பெயரில் பிரியாணி மற்றும் உணவகம் ஆகிய தொழில்கள் செய்து வருகிறோம்.
இதனால் நாங்கள் ஆரம்ப நிலையில் இருந்ததை விட தற்போது நல்ல முன்னேற்றுத்துடன் இருக்கிறோம். கடன் தொகையையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலின் மூலமாக நாங்கள் வெளியில் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
எங்களின் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும், பிள்ளைகளின் கல்வி செலவிற்காகவம் யாரையும் எதிர்பாக்க வேண்டியதில்லை. சுயமாக சம்பாதிக்க முடிகிறது. எங்களைப் போன்ற பெண்களாலும் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ இந்த வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கு குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி என்றனர்.
தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.