fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய கிராமங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆலடிபட்டி இளைஞருக்கு சிபியா விருது

தென்னிந்திய கிராமங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆலடிபட்டி இளைஞருக்கு சிபியா விருது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு சிபியா விருது மதுரையில் வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சாதித்த இளைஞர்கள், மகளிர்கள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள்,சமூக ஆர்வலர்கள், சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு செய்யும் ஊடகங்கள் (யூடியூப்) ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட நூறு நபர்களுக்கு தென்னிந்திய அளவில் செயல்படும் சிபியா அமைப்பு மூலம் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் (சிபியா-2023) விருது வழங்கும் விழா நடைபெற்றது,

இதில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆலடிபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேஷ்வரன் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார், இதில் அழிந்துபோன கிராமங்களைப் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பதிவு செய்தார்,

இதன் மூலம் கிராமத்தை விட்டு சென்ற மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின,பொதுமக்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

சமூக விழிப்புணர்வு

இவரின் சேவையை பாராட்டி சிபியா அமைப்பின் மூலம் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார், மதுரையில் நடைபெற்ற விழாவில் தென்னிந்தியாவில் கிராமங்களை பற்றி சிறந்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் டிஜிட்டல் விஷன் ஆஃப் வில்லேஜ் யூடியூப் சேனலுக்கு விருதினை சிறப்பு விருந்தினர்கள் கவிஞர் சினேகன், விஜய் டிவி புகழ் ஸ்ருதி அர்ஜுன் ஆகியோர் இணைந்து டாக்டர் மகேஸ்வரனுக்கு விருதை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிபியா விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img