கோவை இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு காலண்டர் வெளியிடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் வனவிலங்குகள் பறவை வகைகள் கொண்ட மாத நாட்கள் அச்சிடப்பட்டுள்ள, இந்த நாள்காட்டியில், வருடத்தில் முக்கியமான சுற்றுச்சூழல் தினங்கள், பறவைகள் வனஉயிரினங்கள் எடுக்கப்பட்ட இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்புகைப்படங்களை வன உயிரின புகைப்பட கலைஞர் நித்யன்மணியரசு, அனாஸ்அகமது ஆகியோர் எடுத்துள்ளனர். புதிய காலண்டரை கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே..அசோக்குமார் வெளியிட்டார். துணை வனப்பாதுகாவலர் எல்.சி. ஸ்ரீகாந்த் அதனைப் பெற்றுக் கொண்டார்.
இயற்கை பாதுகாப்பு
இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ஐ.ஜலாலுதீன் பேசும்போது, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வன விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை நீர்நிலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கும் விதமாக இந்தக் காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள பறவைகள் விலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைகளை சார்ந்தவை எனறார். நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர்கள் சி.தினேஷ்குமார், ஆ.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.