fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்வஸ்த் இந்தியாவுக்கான நாட்டுப்புற இசை’ தமிழ் ஆல்பம் வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்

‘ஸ்வஸ்த் இந்தியாவுக்கான நாட்டுப்புற இசை’ தமிழ் ஆல்பம் வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்

டெட்டால் பனேகா ‘ஸ்வஸ்த் இந்தியா’ (DBSI) சென்னையில் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் கிராமாலயாவுடன் இணைந்து சுகாதாரத்தை மையமாகக் கொண்ட தமிழ் இசை ஆல்பமான ‘ஸ்வஸ்த் இந்தியாவுக் கான நாட்டுப்புற இசையை’ அறிமுகப்படுத்தியது.

இசை ஆல்பத்தை தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் வெளியிட்டு பேசியதாவது:
இந்து தமிழ் திசையும் டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியாவும் இணைந்து கடந்த ஆண்டு “சுத்தம் சுகா தாரம்” என்ற ஆன்லைன் தொடரை தயாரித்தது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிலையான சுகாதார நடத்தையின் முக்கியத்துவத்தை இத்திட்டம் உணர்த்தியது.

தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழக மக்களுக்கு சுகா தாரமான நடவடிக் கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டிய அவ சியம் உள்ளது என்றார்.
ரெக்கிட் தெற்காசியா வின் மூத்த துணைத் தலைவர் கவுரவ் ஜெயின் பேசும்போது, கலை, இசை ஆகியவை பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சக்திவாய்ந்த கருவிகள் . நல்ல நடைமுறைகளை மாற்றியமைக்க மக்களை அழைத்து செல்லும்.

பார்வையாளர்களுடன் இணைவதற்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த சமூக செய்திகளை திறம்பட வழங்குவதற்கும் இசையை ஓர் ஊடகமாக பார்க்கிறோம் என்றார்.

ரெக்கிட்-தெற்கா சியாவின் வெளியுறவு மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி பட்நாகர் பேசும்போது, தமிழ் சுகாதார இசை ஆல்பம் மாநிலம் முழுவதும் நடத்தை மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான எங்கள் நோக்கத்துக்கான ஒரு சிறந்த படி என்று நாங்கள் நம்புகிறோம்.

டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியாவுடன், ‘ஸ்வஸ்த் இந்தியாவை” உருவாக்க அடிமட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை வழங்கக் கூடிய தனித்துவமான வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றார்.

இந்து தமிழ் திசையின் சீப் ஆப்பரேட் டிங் ஆபீசர் சங்கர் வி.சுப்பிரமணியம், ஹைஜின் மியூசிக் ஆல்பத்தின் இசையமைப் பாளர் ஜேம்ஸ் வசந்தன், கிராமா லயாவின் நிறுவனர் மற்றும் சிஇஓ சாய் தாமோதரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img