fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் பைக் அறிமுகம்- பிளிப்கார்ட் உடன் மேட்டர் ஏரா கைகோர்ப்பு

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் பைக் அறிமுகம்- பிளிப்கார்ட் உடன் மேட்டர் ஏரா கைகோர்ப்பு

ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு EV ஸ்டார்ட் அப் நிறுவனமான மேட்டர், இன்று இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் சந்தையான ஃபிளிப்கார்ட் உடன் தனது கூட்டிணைவை அறிவித்தது. இதன் மூலம் மேட்டர் ஏரா (Matter AERA)பைக்கை எளிதான வழியில் முன்பதிவு செய்து வாங்கலாம்.

மேட்டரின் நிறுவனர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி மோஹல் லால்பாய் கூறியதாவது: பல மக்கள்தொகுதிகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் மின்சார வாகனங்களின் அணுகல் கிடைக்க வேண்டுமென்று மேட்டர் விரும்புகிறது.

கூட்டிணைவு

ஃபிளிப்கார்ட் உடனான எங்கள் கூட்டிணைவு மூலம், புதிய யுக இயக்கம் மற்றும் நிலையான தொழில் நுட்பம் பரந்த அளவில் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைந்து அவர்களும் அதை அணுகி ஏற்றுக்கொள்வதால், 22-ம் நூற்றாண்டிற்கு வழிவகுக்கும் சிறந்த எதிர்காலம் உருவாகும்’ என்றார்.

ஃபிளிப்கார்ட்டின் எலக்ட்ரானிக்ஸ் டிவைசஸ் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் பிரிவின் இயக்குநர் பாரத் குமார் பி.எஸ். கூறியதாவது:
ஃபிளிப்கார்ட் புதுமைகளை ஊக்குவிப்பதிலும் வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முன்னணியில் உள்ளது.

இந்தியாவின் முதல் கியர் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான மேட்டர் ஏராவின் வெளியீடு, அவர்கள் அந்த திசையில் வைத்த ஒரு படியாகும்.

இந்தியா முழுவதும் உள்ள 25 மாவட்டங்களில் 2000 அஞ்சல் குறியீடுகளில் உள்ள வாடிக்கையாளர்களால் மேட்டர் ஏரா மோட்டார் சைக்கிளை முன்பதிவு செய்து ஃபிளிப்கார்டில் வாங்கி, சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களையும் பெறலாம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img