fbpx
Homeபிற செய்திகள்கோவை கொங்குநாடு மருத்துவமனையில் ஏப்.1 முதல் மே 31 வரை அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் கோடைகால...

கோவை கொங்குநாடு மருத்துவமனையில் ஏப்.1 முதல் மே 31 வரை அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் கோடைகால சிறப்பு சலுகை

கொங்குநாடு மருத்துவமனை கோவையின் மையப்பகுதியான டாடாபாத்தில், பவர் ஹவுஸ்க்கு எதிரில் 375 படுக்கைகளுடன் எல்லாவிதமான பரிசோதனை வசதிகளுடன், எல்லாவிதமான நோய்களுக்கும் கைதேர்ந்த அனுபவமிக்க சிறப்பு டாக்டர்களைக் கொண்டு சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றது.

கொங்குநாடு மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கொங்கு பகுதியின் மக்களின் நன்மதிப்பையும் ஏகோபித்த ஆதரவையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டும் வருகிற 2026 ஏப்ரல் 1 முதல் மே 31 வரை சிறப்பு சலுகையில் பேக்கேஜ் முறையில் எல்லாவித அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றது.

பேக்கேஜ் முறையில் மருத்துவமனை பில், மருந்து பில், டாக்டர் பில் அனைத்தும் அடங்கும். அவசரமில்லாத அறுவை சிகிச்சையினை பலர் கோடை விடுமுறையில் செய்து கொள்ளலாம் என்றிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம் மிகவும் பயனுள்ளதாக கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

சிறுவர்களுக்கு, பொது அறுவை சிகிச்சைகளான கழுத்தில் கட்டி, டான்சில், வயிற்றில் கட்டி, அப்பெண்டிக்ஸ், ஹெர்னியா, சுன்னத், விரைவீக்கம் போன்ற ஆபரேசன்கள், பெண்களுக்கு தைராய்டு, மார்பில் கட்டி, வயிற்றில் ஹெர்னியா. அப்பெண்டிக்ஸ், கர்ப்பப்பையில் கட்டி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன், பைல்ஸ். காலில் ரத்தகுழாய் ஆபரேசன். கேன்சர் ஆபரேசன்களும், ஆண்களுக்கு வயிற்றில் அல்சர். ஹெர்னியா, அப்பெண்டிக்ஸ். பைல்ஸ், காலில் ரத்தநாளங்கள் அடைப்பு ஆபரேசன் மற்றும் வாய், கழுத்து, மார்பு, வயிறு, கை காலில் தோன்றும் கேன்சர் கட்டி ஆபரேசன் போன்ற அனைத்து பொது அறுவை சிகிச்சைகளும் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது.

லேப்ராஸ்கோபியில் செய்யப்படுகின்ற அப்பெண்டிக்ஸ், ஹெர்னியா. பித்தப்பை அகற்றுதல், கர்ப்பப்பை அகற்றுதல், குடல் அறுவை சிகிச்சைகள், வயிற்று பகுதியில் கட்டி அறுவை சிகிச்சைகளுக்கும் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது.
பிளாஸ்டிக் அறுவைசிகிச்சையில் செய்யப்படுகின்ற முகம், மார்பு. வயிறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கும் சிறப்பு சலுகை உண்டு.

சர்க்கரை பாத பராமரிப்புக்கென்று தனித் துறையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இரத்த குழாய் அடைப்பை நீக்க ஸ்டெண்ட், பைபாஸ் சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்களைக் கொண்டு பாத புண் அறுவை சிகிச்சைகள் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது.

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளும் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது. சிறுநீரக ஆபரேசன்கள், சிஸ்டாஸ்கோப் மூலம், சீ-ஆர்ம் பயன்படுத்தி கல், புராஸ்டேட் கட்டி மற்றும் சிறுநீர்பாதை அடைப்பதற்கு அறுவைசிகிச்சைகள் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றன.

மூளை, நரம்பு அறுவை சிகிச்சையில் தலைகாயம், மூளை இரத்தக்கட்டி அறுவை சிகிச்சை, மூளை கட்டி அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது. புற்று நோயில் வாய்புற்று அறுவை சிகிச்சை, கழுத்து கட்டி அறுவைசிகிச்சை, மார்பு கட்டி அறுவை சிகிச்சை, வயிற்று புற்று கட்டி அறுவை சிகிச்சை. கர்ப்பப்பை கட்டி கேன்சர் அறுவை சிகிச்சைகள் அனுபவம் மிக்க கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது. இரத்த நாள அறுவை சிகிச்சைகளும் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது.

மிகவும் பழுத்த அனுபவமிக்க இருதய அறுவை சிகிச்சை நிபுணரை கொண்டு எல்லா விதமான இருதய அறுவை சிகிச்சைகள் சிறப்பு சலுகையில் செய்யப்படுகின்றது.

அறுவை சிகிச்சை தேவைப்படு வோர்களுக்கு பரிசோதிக்க நவீன லேப், டிஜிட்டல் எக்ஸ்ரே, நவீன் அல்ட்ராசவுண்டு ஸ்கேன், சீ.டி. ஸ்கேன் எம். ஆர். ஐ ஸ்கேன் வீடியோ என்டாஸ்கோபி. நவீன நுரையீரல் ஆய்வு மையம். இருதய கேத்லேப் ஆஞ்சியோகிராம். ஆஞ்சியோபிளாஸ்டி வசதியுடன். எக்கோ, டி.எம்.டி.யுடன் நவீன இருதய பரிசோதனைமையமும் உள்ளது. நவீன தீவிர மருத்துவ சிகிச்சை பகுதி. நவீன தீவிர அறுவை சிகிச்சை பகுதி. நவீன தீவிர இருதய சிகிச்சை பகுதி உள்ளது.

இத்தனை வசதிகளுடன் அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆபத்தான மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளையும் மிகவும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செய்யப்படுகின்றது.

விபத்தினால் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை உடம்பில் ஏற்படுகின்ற அனைத்து காயங்களுக்கும் சிகிச்சை அளிக்க 24 மணி நேரம் விபத்து சிகிச்சை மையம் செயல்படுகின்றது. அதற்கு உறுதுணையாக 24 மணி நேரமும் இயங்கும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு, லேப், எக்ஸ்ரே, ஸ்கேன், இரத்தவங்கி, பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவும் இங்கு சிறப்பாக செயல்படுகிறது.

24 மணிநேர ஆம்புலன்ஸ் வசதியும் உண்டு. சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ நிபுணர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளனர். எல்லாவித வசதிகள் கொண்ட அவசர ஆபரேசன் தியேட்டர் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளது.

ஆபரேசன் செய்து கொள்வோர் மருத்துவமனைக்கு வந்து அறுவை சிகிச்சை டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்று, ஆபரேசன் செய்ய வேண்டிய வியாதிக்குரிய செலவு மற்றும்அதற்குரிய சிறப்பு சலுகையை கேட்டு, அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவை தெரிந்து கொள்ளலாம். ஆபரேசன் செய்து கொள்ள விருப்பமான தேதியையும் நாளையும் பதிவு செய்து கொள்ளலாம்.

2026 ஏப்ரல் 1 முதல் மே 31 வரை எப்போது வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9944412222 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.


இந்த தகவலை கொங்குநாடு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ப.ராஜு தெரிவித்தார். உடன் கொங்குநாடு மருத்துவமனை மெடிக்கல் டைரக்டர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img