சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கயம்பாளையம், காடம்பாடி, மாதப்பூர், மயிலம்பட்டி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை, தார் சாலை, அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமரவேல், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி கந்தவேல், கே.எஸ்.ஆர் சந்திரசேகர், பாலசுப்பிரமணி, காடம்பாடி தலைவர் இந்திராணி தங்கராஜ், துணைத் தலைவர் அசோக்குமார், ஐடி விங் வினோத், சூலூர் கார்த்தி, பட்டணம் ராஜன், சின்னச்சாமி மாதப்பூர் பொன்னுச்சாமி தலைவர் செல்வராஜ் துணைத் தலைவர் பேபி செந்தில் குமார் எஸ்.வி.டி. செந்தில்குமார், சன் ராஜேந்திரன், மயிலம்பட்டி தலைவர் ராதாமணி துணை தலைவர் பாக்கியலட்சுமி வார்டு உறுப்பினர் சுகுமார், ஒப்பந்ததாரர்கள் குணா, என்.எஸ்.என்.தேவராஜ், அசோக் குமார், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



