Homeபிற செய்திகள்வனவிலங்கு வார விழாவில் மாணவர்கள் விழிப்புணர்வு

வனவிலங்கு வார விழாவில் மாணவர்கள் விழிப்புணர்வு

வனவிலங்கு வார விழாவையொட்டி, சென்னிமலை அருகே முகாசிப்பிடாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில், மாணவர்கள் பல்வேறு வனவிலங்குகளின் முகமூடிகளை அணிந்து பங்கேற்றனர். மேலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பட்டாம்பூச்சியின் வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காடுகள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்து, இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் இயற்கை வாழிடங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வனவிலங்கு வார விழா ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img