கோவையில் இஸ்ரோ சார்பில் நடைபெற்ற கண்காட்சி மூலம் 2325 அரசு பள்ளி மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) விண்வெளி கண்காட்சி 2026 கோவை குனியமுத்துர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5.10.2026 முதல் 07.10.2026 வரை நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கோவை மாநகராட்சியின் மேல் நிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் என 64 பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 2,325 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண் காட்சியினை பார் வையிட்டு பயனடைந்துள்ளனர்.

இக்கண்காட்சியில் 42 அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. PSLV, GSLV, SSLV ராக்கெட் மாடல்கள் காட் சிக்கு வைக்கப்பட்டு, அவை செயல்படும் வீதம் குறித்து விண்வெளி மைய நிபுணர்களால் மாணவ, மாணவிகளுக்கு எடுத் துரைக்கப்பட்டது. மேலும், சந்தி ராயன், மங்கல்யான் மற்றும் ககன்யான் சார்ந்த விளக்கங்களும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது.
இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த அறிவியலை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி மற்றும் வினாடிவினா ஆகியவற்றிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



