Homeபிற செய்திகள்கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் குவித்த தேனி மாணவ, மாணவிகள்

கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் குவித்த தேனி மாணவ, மாணவிகள்

தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் தேசிய அளவில் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற ஜூனியர், சப் ஜூனியர் சீனியர் போட்டியிலும் ஓடிசாவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியிலும் தேனி மாவட்டத்திலிருந்து 12 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஜூனியர் பிரிவில் திரிதேவ தங்கப்பதக்கமும் அஸ்வத் வெள்ளிப் பதக்கமும் சம்யுக்தா வெள்ளிப்பதக்கமும் சப் ஜூனியர் பிரிவில் கிருபாஸ்ரீ வெண்கலப்பதக்கமும் சீனியர் பிரிவில் நவீன் வெண்கல பதக்கமும் வென்று உள்ளனர்.

இவர்களை தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் பி.மகாராஜன், செயலாளர் துரைமுருகன் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்ணியப் பிள்ளை பட்டியில் உள்ள பயிற்சி கூடத்தில் வைத்து பாராட்டினர் அவர்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த தேசிய அளவிலான நடந்த கிக் பாக்ஸின் போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து பங்குபெற்ற மாணவ மாணவியர்கள் வசுமதி, சம்ஸிதா, யாழினி, ஜீவிதா, மோகன பிரசாத், குமரன், நிவாஸ், நிர்மலா,, ஸ்ரீதேவி ஆகிய மாணவ மாணவிகள் பங்கு கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் வி.மகராஜன் தெரிவிக்கையில் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிப்பது எமது குறிக்கோளாகும் அதேபோல் தேனி மாவட்டத்தில் 250 மாணவ மாணவிகள் எங்களது அசோசியேஷனில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கென கிக் பாக்ஸிங்ல் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். பரிசு பெற்ற மாணவர்கள் எங்களது தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷனில் பயிற்சி பெற்று பதக்கங்களை வென்றது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது

படிக்க வேண்டும்

spot_img