Homeபிற செய்திகள்தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் தரவேண்டும் நாமக்கல் பட்டாசு வணிகர்கள்...

தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் தரவேண்டும் நாமக்கல் பட்டாசு வணிகர்கள் சங்கம் கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பே பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் வழங்க வேண்டும். மேலும், விற்பனை முடிந்த பிறகு மீதமாகும் பட்டாசுகளை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு நாமக்கல் மாவட்டத்தில் பெரிய அள விலான குடோன் அமைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட பட்டாசு வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட பட்டாசு வணிகர்கள் சங்கத்தின் 10-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். தலைவர் லோகேஸ்வரன் வரவேற்றார். கரூர் மாவட்ட சங்க தலைவர் பாரி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து சங்க தலைவர் லோகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்புதான் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. இதனால், பட்டாசுகளை முன்கூட்டியே கொள்முதல் செய்து, கடைகளில் பாதுகாப்பான முறையில் வைத்து விற்பனை செய்வதில் வணிகர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
எனவே, தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்க வேண்டும். அதேபோல், தீபாவளிக்கு பின்னரும் 15 நாட்களுக்கு விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசுகளை வீடுகளிலோ அல்லது அனுமதியற்ற இடங்களிலோ இருப்பு வைப்பதில்லை. விற்பனை முடிந்த பின்னர் மீதமாகும் பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பாக குடோன் களில் வைக்க வேண்டும் என வணிகர்களுக்கு அறிவு றுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவிலான பட்டாசுகளை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு போதிய அளவில் பெரிய குடோன் வசதி இல்லை. சிவகாசி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடோன்களில் பட்டாசுகளை இருப்பு வைக்க அதிக வாடகை வசூலிக்கப்படுகிறது. மேலும், தேவையான அளவுக்கு பட்டாசுகளை அங்கு இருப்பு வைக்க அனுமதியும் கிடைப்பதில்லை.
இதனால், தீபாவளி விற்பனை முடிந்த பின்னர் மீதமாகும் பட்டாசுகளை வணிகர்கள் குறைந்த விலைக்கு திருப்பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு விதிமுறை களுக்கு உட்பட்டு, ஒதுக்குப் புறமான பகுதியில் பெரிய அளவிலான பட்டாசு குடோன் ஒன்றை அமைத் துக் கொடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 600 பேர் பட்டாசு விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி 250 முதல் 300 பேர் வரை தற்காலிக பட்டாசு கடை களை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி மற்றும் குடோன்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி மற்றும் சந்தைக்கு வரும் பட்டாசுகளின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img