fbpx
Homeபிற செய்திகள்வனக்கல்லூரியில் மாணவர் நல மன்ற தின விழா - வேளாண் பல்கலை துணைவேந்தர் பங்கேற்பு

வனக்கல்லூரியில் மாணவர் நல மன்ற தின விழா – வேளாண் பல்கலை துணைவேந்தர் பங்கேற்பு

.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் நல மன்ற தின விழா கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமையில் நேற்று கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது,பேசிய அவர், வனக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு துறைகளில் செய்துள்ள சாதனைகளை பாராட்டினார். மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் பசுமை இந்தியா திட்டம் குறித்தும் வழக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்லூரியின் மாணவர் நல மன்றத்தின் கீழ் இயங்கும் 17 பல்வேறு வகையான துணை மன்றங்களின் கடந்த ஓராண்டிற்கான செயல்பாடுகளின் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டார்.

இவ்விழாவில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தாவர வளம், கற்பித்தலில் எண்ணிம தொழில்நுட்பம்,வளம் குன்றிய நிலங்களின் மறுசீரமைப்பு,இலை மற்றும் பூ என நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து மாணவர்கள் மர இனங்களுக்கான திசு வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு போன்ற அனுபவக் கல்வியின் வாயிலாக பெற்ற லாபத்தை காசோலையாக மாணாக்கர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் வனக்கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள்,துறை தலைவர்கள்,அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர் நல மன்ற ஆலோசகர் பேராசிரியர்.சேகர் வரவேற்புரை ஆற்றினார்.மாணவர் நல மன்ற மாணவர் செயலாளர் செல்வி உச்சி மாகாளி நன்றி உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img