தர்மபுரி செல்லியம்பட்டியை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார்.
தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டியை சேர்ந்தவர் அருள் அந்தோணி. இவர் காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருள்மலர்க்கரசி. இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் ஆல்வின்(6). இந்த நிலையில் ஆல்வினுக்கு கடந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மஞ்சள் காமாலை பாதிப்பாக இருக்கலாம் என கருதிய ஆல்வினின் பெற்றோர் நாட்டுமருந்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் ஆல்வின் குணம் அடையாததோடு சிறுநீரில் ரத்தம் வந்தது. இதனால் ஆல்வினை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர் வருண் மகாபலேஸ்வரர் மற்றும் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்ததில் ஆல்வினுக்கு வில்சன் எனப்படும் மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதற்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது சிறுவன் ஆல்வின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து ஆல்வினின் தந்தை அருள்அந்தோணி கூறியதாவது: எங்களது மகனுக்கு ஆல்வின் கடந்த ஏப்ரல் மாதத்தில் உடல் நலம் பாதித்தது. கண் மஞ்சளாக இருந்ததால் மஞ்சள்க £மாலை பாதிப்பு என நாட்டு மருத்துவ சிகிச்சை பெற்றோம். ஆனால் சில நாட்களில் நோய் பாதிப்புஅதிகரித்து சிறுநீரில் ரத்தம் வந்தது.
இதையடுத்து பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு டாக்டர் வருண் மகாபலேஸ்வரர் மற்றும் குழுவினர் ஆல்வினை பரிசோதனை செய்து ஆல்வினுக்கு வில்சன் எனும் மரபணு நோய் ப £தித்துள்ளது என தெரிவித்தனர். இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் இதயம், மூளையை பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்என கூறினர்.
முதற்கட்டமாக ஆல்வினுக்கு பிளாஸ்மா டயாலிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஒரே ரத்த குரூப் உள்ள தாயோ தந்தையோ கல்லீரல் தானம் வழங்கவேண்டும் என கூறினர். இதற்கான பரிசோதனைக்கு பின்னர் எனது மனைவியான ஆல்வின் தாயின் கல்லீரலை தானமாக வழங்கினார்.
இதையடுத்து ஆல்வினுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்தது. இதற்காக அறுவை சிகிச்சைக்காக ரூ.21 லட்சம் செலவானது. பெங்களூருவிலேயே நாங்கள் 4மாதம் தங்கி ஆல்வினுக்கு தொடர் சிகிச்சை பெற்றோம்.
இன்னும் ரூ.30 லட்சம் வரை செலவிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆல்வின் பூரண குணம் அடைந்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



