fbpx
Homeபிற செய்திகள்ஜூலை 12ம் தேதி கோவையில் ‘ஸ்டார்ஸ் நைட் அவுட்’ கலை நிகழ்ச்சி

ஜூலை 12ம் தேதி கோவையில் ‘ஸ்டார்ஸ் நைட் அவுட்’ கலை நிகழ்ச்சி

பிக்ஹிட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கோவையில் ‘ஸ்டார்ஸ் நைட் அவுட்’ கலை நிகழ்ச்சி ஜூலை 12ம் தேதி கோவை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நிகழ்ச்சிக்கான போஸ்ட்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலை நிகழ்ச்சிக்கான போஸ்ட்டரை நடிகை கீர்த்தி ஷெட்டி, பாடகி ரேஷ்மா, பிக் ஹிட் எண்டர்டைன்மென்ட் முதன்மை செயல் அதிகாரி பாரதி மோகன், முதன்மை செயல் இயக்குனர்கள் விஷ்ருத் சுரேஷ்குமார், அஜய் பாரதி மோகன், சி.ஓ.ஓ. சரவணகுமார், பவிழம் ஜூவல்லர்ஸ் மேலாண்மை இயக்குனர் லிஜோ ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூபாய் 599 முதல் புக் மை ஷோ, ஹிட்இட், இன், டிக்கெட் பிரிக்ஸ் ஆகிய இணையதளங்களில் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img