தூத்துக்குடி மாவட்டம் கிறிஸ்தியா நகரம் தூய மாற்கு ஆலய 178வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நேற்று 1.2.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. சிறப்பு பிரார்த்தனைகளைத் தொடர்ந்து அசன விருந்து பரிமாறப்பட்டது.

விழாவில் சேகர தலைவர் பாதிரியார் சுந்தர்சிங் ஐசக் ராஜா, சபை ஊழியர் அபியா ஜெயம், 2026ம் ஆண்டு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பரிபாலனர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை, தலைவர் ஜெ.பால்ராஜ், செயலாளர் பி.பிரின்ஸ், பொருளாளர் ஏ.ஜெபஸ்டின் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ், கௌரவ ஆலோசகர்கள் ஜி.அருள்ராஜா, டி.மார்ட்டின், கே.துரைராஜ் ஜோசப், பி.ஜெயபாண்டி, ஜி.ஆமோஸ் ராஜா, பி.ஜாண் பாஸ்கர், தணிக்கை குழு உறுப்பினர்கள்

ஜெ.ஜெயப்பிரகாஷ், எம்.பட்டுராஜன், ஏ.ஜாண்சன் சுந்தர்ராஜ், ஐ.சுந்தர், டி.லிவிங்ஸ்டன், பி.எல்.பெவிஸ், டி.மாற்கு, ஜி.ராஜ்குமார், பி.பிரபாகர் தேவக்குமார், அசன கமிட்டி உறுப்பினர்கள் பி.அருள் செல்வக்குமார், எஸ்.ரவிக்குமார், ஜெ.ராஜபாலன், டி.ஐசக் ஜெகநாதன், டி.கவாஸ்கர், டி.செல்வராஜ், சுஜில், ஏ.பிரபாகர், டி.ஜெ.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அசன பண்டிகையில் பல்லாயிரம் பேர் பங்கேற்று அசைவ விருந்து உண்டு மகிழ்ந்தனர்.



