fbpx
Homeபிற செய்திகள்நிலைத்த எரிசக்தி முன்னெடுப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிலைத்த எரிசக்தி முன்னெடுப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இந்தியா 2026 நிகழ்வில் சுத்தமான எரிசக்தி முன்னெடுப்புகளில் முன்னணி வகித்தது.

27-30ம் தேதிகளில் கோவாவில் நடைபெற்ற இந்தியா எரிசக்தி வாரம் 2026ல் கலந்து கொண்டு, இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் நிலைத்துவான கட் டமைப்பு வளர்ச்சிக்கான தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்வு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரி வாயு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், உத்தரபிரதேசத்தைச் சார்ந்த ஓரியானா பவர் லிமிடெட்டுடன் நிலைத்த எரிசக்தி முன் னெடுப்புகளில் ஒத்து ழைப்பு செய்யும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு வ.உ.சிதம்பரனார் துறைஎ முக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் முன்னிலையில் நிர்வாக பொறியாளர் செந்தில் கணேஷ், வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் ஓரியானா பவர் லிமிடெட் சார்பாக ஓம்காள் நாத், GH2 வர்த்தகத் தலைவர் மற்றும் அனிருத் சரஸ்வத், இணை நிறுவனர், நிர் வாகி மற்றும் வர்த்தக அதிகாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை நோக்கத் தின் மற்றொரு முக்கிய முன்னெடுப்பாக, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் யுனிவர்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிட் ஆகியோருடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் பல்வேறு எரிபொருள் வழித்தடங்களில் மாற்றத்தை மேற்கொண்டு வரும் கப்பல் சேவை நிறுவனங்களுக்கு, பசுமை மெத்தனால் வசதிகளை வழங்குவதற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையாக தயாராக உள்ளது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img