செங்கல்பட்டு மாவட் டம் எஸ்.ஆர்.எம் காட்டாங்கொளத்தூர் பல் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையின் வாய் நோய்க் குறியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை சார்பில் ஒரு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
அதில் அமைப்பு செயலாளர் முனைவர் டாக்டர் எ.சிவச்சந்திரன் வரவேற் புரை நிகழ்த்தினார். மேலும் முனைவர் டாக் டர் எம்.சத்தியகுமார் மற்றும் முனைவர் டாக் டர். ஆர்.அரவிந்தன் ஆகியோர் 17வயது முதல் 21வயது உட்பட்ட 4000 மாணவர்களுக்கு ஒரே இடத்தில் வாய்வழி சுய பரிசோதனை குறித்து விளக்கமளித்து வாய் புற்றுநோயின் ஆராம்ப அறிகுறிகளை அனை வரையும் சுயபரிசோதனை செய்ய வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இணை துணைவேந்தர் டாக்டர் லெப்டினெண்ட் கர்னல் ஏ.ரவிக்குமார், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியல் மற்றும் சட்டம் மற்றும் மேலாண்மை பள்ளி இணை துணை வேந்தர் ஏ.வினய் குமார், வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நோயியல் நிபுணரின் இந்திய சங்கம் செயலாளர் முனைவர் டாக்டர் நதீம் ஜெடி, டீன் டாக்டர் என். விவேக் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் நிதின் நகர்கர், டீன் டாக்டர் எ.துரைசாமி மற்றும் துணை டீன் டாக்டர் எஸ்.ஆல்பர்ட் ஆண்டனி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியாக கலாம் உலக சாதனைகள் அமைப்பு சார்பில் முனைவர் டாக் டர் கே.டி.மகேஷ், இந்நிகழ்வை வெற்றிகரமாக முடித்ததற்கு சாதனை படைப்பாக பதிவு செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை துறைத் தலைவர் மற்றும் துணை முதல்வர் பெற்றுக் கொண்டனர்.