Homeபிற செய்திகள்நந்தா சித்த மருத்துவக் கல்லூரியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான போட்டிகள்

நந்தா சித்த மருத்துவக் கல்லூரியில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான போட்டிகள்

ஈரோடு நந்தா சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் ஈரோடு சிறகுகள் மற்றும் வடக்கு ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளின் தன்னம் பிக்கை, சமூகப் பங்களிப்பு மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் செங் கோட்டையன் தலைமை வகித்தார். அமைச்சர் விஜய்பாலாஜி, முன்னாள் அமைச்சர் கே.வி.ராம லிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், உறுப்பினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார், பிரதீப், திருமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளவியலாளர் மருத்துவர் கிருத்திகா வரவேற்றார்.
நிர்வாக அலுவலர் தர்மராஜ் மேற்பார்வையில் கல்லூரி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினர். கல்லூரி முதல்வர் மருத்துவர் மேனகா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img