fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்ருஷ்டி 2025’ கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி கோவையில் தொடங்கி

‘ஸ்ருஷ்டி 2025’ கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி கோவையில் தொடங்கி

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “ஸ்ருஷ்டி 2025” என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்ட பத்தில் செப்டம்பர் 18 (இன்று) தொடங்கியது வரும் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

38 ஆண்டுகளாக கைவி னைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர் களின் முன்னேற்றத்திற் காக தமிழ்நாடு கைவினைக் குழு செயல்படுகிறது. இந்த அமைப்பு சென்னை இந்திய கைவினைக் குழு மற்றும் .உலக கைவினைக் குழு ஆகியவை உடன் இணைந்து செயல்படுகிறது. “ஸ்ருஷ்டி 2025” நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்களால் ஒழுங்கு படுத்தப்படும் இந்தக் கண்காட்சி, கடந்த 27 ஆண்டுகளாக கோவை மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கைவினைஞர்கள், நெசவாளர் கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வடிவ மைப்பாளர்களின் தனித்துவமான படைப்புகள் இங்கே காட்சிப் படுத்தப்படுகின்றன. இந்த கண் காட்சியில் பூர்வீக நெசவுகள் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் நோக்கில், ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அணியும் ஆடைகள், விலையுயர்ந்த நகைகள், வீட்டு அலங்காரம், வீட்டு துணி, வாழ்க்கை முறை ஆபரணங்கள் என பல கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு முதல் முறை யாக பல புதிய லேபிள்கள் அறிமுகமாகின்றன. மேலும், கோவை வாடிக்கையாளர்களின் கவரும் வகையில் சுவை மிகுந்த உணவுகளுடன் 6 உணவு ஸ்டால் களும் அமைக்கப்பட்டுள்ளள.
“ஸ்ருஷ்டி 2025” கண்காட்சி, தமிழ்நாடு கைவினைக் குழு, ஆண்டு முழுவதுமான செயல்பாடு களுக்கான நிதி ஆதாரங்களை ஏற் படுத்திக் கொடுக்கிறது. இங்கிருந்து பெறப்படும் வருமானம், கோவையில் நடைபெறும் வருடாந்திர கைவினைப் பஜாரில் கைவினைஞர்களுக்கு வழங் கப்படும் மானிய நிதியாக பயன்ப டுத்தப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில், கண் காட்சியை பார்வையிடும் வாடிக்கையாளர் கள், தங்கள் சொந்த பைகளை கொண்டு வர வேண்டும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img