Homeபிற செய்திகள்ஸ்ரீராம் இலக்கியக்கழக போட்டி மாணவர்கள் பங்கேற்பு

ஸ்ரீராம் இலக்கியக்கழக போட்டி மாணவர்கள் பங்கேற்பு

ஸ்ரீராம் இலக்கியக்கழகம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திருக்குறள் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அண்மையில் கோவையில் உள்ள சுபர்பன் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகளை நடத்தியது.

இதில் ஓவியப் போட்டியில் 176 மாணவர்களும், பேச்சுப் போட்டியில் 110 மாணவர்களும், கட்டுரைப் போட்டியில் 47 மாணவர்களுக்கும் என – கோவை, சத்திய மங்கலம், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 333 மாணவர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் ராஜூ பேசுகையில், “18 வயது நிரம்பாத பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது. நாம் பொறுப்போடு வாகனங்களை ஓட்டி விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும்” என்றார். இவ்விழாவில் ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் ப.மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img