fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 43வது ஆண்டு விழா எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு எஸ்.என்.ஆர் கல்வி குழுமம் சுந்தர் தலைமை வகித்தார். துணை தலைவர் நரேந்திரன் தலைமை முதன்மை கல்வி அதிகாரி ராம்குமார் மற்றும் நிர்வாக அதிகாரி மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி பங்கேற்றார். பள்ளி முதல்வர் டயானா 2024 – 2025ம் ஆண்டின் பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியானது மாணவ மாணவியர்களின் நாட்டியத்துடன் இசையும் சேர்ந்து ஒலித்தது.

படிக்க வேண்டும்

spot_img