fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன் விழாவுக்கு குடியரசு துணை தலைவர் வருகை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன் விழாவுக்கு குடியரசு துணை தலைவர் வருகை

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50வது ஆண்டு பொன் விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25வது ஆண்டு வெள்ளி விழாவையும் வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது.

இதன் அறிவிப்பு நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட் டியளித்தார்.

அப்போது பேசியதாவது: 1975 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை துவங்கப்பட்டது. 1990–ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்னும் முதல் வெற்றியைப் பதித்தது.

2005 இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகை புரிந்தார். புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறை அப்போது தொடங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் கட்டமைக்கப்பட்டது.

2016 இல் 8 மணி நேரத்தில் 13,206 நபர்கள் தங்கள் உடல் உறுப்புதான ஒப்புதல் படிவங்களை நிரப்பி மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தி “கின்னஸ் வேர் ல்ட் ஆப் ரெக்கார்ட்” புத்தகத்தில், சரித்திர நிகழ்வைப் பதித்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இதே தருணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்து வமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.

இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி, மாலை 5 மணிக்கு 2 விழாக்களையும் கோலாகலமாகக் கொண் டாடப்பட உள்ளது. இதில் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப் புரையாற்றுகிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து டாக்டர் சுந்தர் பேசுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய ஒரு மருத்துவ நிறுவனமாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம்” என்றார்.

பேட்டியின் போது, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img