fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் இசிஎல் ஃபைனான்சின் சொத்து பிணையக் கடன் கிளை திறப்பு விழா

சேலத்தில் இசிஎல் ஃபைனான்சின் சொத்து பிணையக் கடன் கிளை திறப்பு விழா

எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் வங்கியில்லாத நிதி நிறுவனமான (NBFC) இசிஎல் பைனான்ஸ் லிமிடெட் (ECLF), தமிழ்நாட்டில் தனது ஐந்தாவது சிறு வணிக சொத்து பிணையக் கடன் (LAP) கிளையை சேலத்தில் தொடங்கியிருக்கிறது.

இதன் மூலம் நிதி சேவைகள் பிரிவில் செயற்பரப்பை இந்நிறுவனம் விரிவுபடுத்தியிருக்கிறது. இப்பகுதியில் உள்ள சேலம் மாநகரிலும் மற்றும் இம்மாவட்டத்திலும் இயங்கி வரும் சிறு வணிக நிறுவனங்களுக்கு முறைப்படுத்தப்பட்ட மற்றும் சரியான நேரத்தில் கடன் பெறுவதற்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தக் கிளை நிறுவப்பட்டுள்ளது.

தனது சிறு வணிக சொத்து பிணையக் கடன் திட்டத்தின் (LAP) கீழ், குடியிருப்பு, வணிக நிறுவனம் மற்றும் தொழில கம் சார்ந்த சொத்துகளுக்கு பிணைய அடிப்படையில் ரூ.50 லட்சம் வரை இசிஎல் பைனான்ஸ் நிதி (கடன்) வழங்குகிறது.

இது குறித்து இசிஎல் பைனான்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அஜய் குரானா கூறுகையில், “பொருளாதார வளர்ச்சி யைத் தூண்டுவதில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) முக்கியமான பங்கு வகிக்கின்றன.

எங்களது சிறு வணிக LAP தீர்வு, தொழில்முனைவோருக்கு சரியான நேரத்தில் மற்றும் நெகிழ்வுத்தன்மையுள்ள நிதி ஆதரவை வழங்குவதற்கெனவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.

சேலம் மாநகரில் எமது கிளையின் தொடக்கம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் எங்களது இருப்பை வலுப்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்றார்.

சேலம் கிளையின் தொடக்கம், தமிழ்நாட்டில் இசிஎல் பைனான்ஸின் இருப்பை மேலும் வலுவாக் குவதுடன், வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய மையங்களில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான தனது சேவைகளை விரிவுபடுத்தும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img