தேனி யுஎஸ்ஏ அத்தெலடிக் அகாடமி சார்பில் மாநில அளவிலான அழைப்பு தடகளப் போட்டிகள் நேற்று தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் 12 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் கலந்து கொண்ட 100 மீட்டர்,200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும்,நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ,தட்டு எறிதல், 4 x 100 மீ. 4 x 400 மீ தொடர் ஓட்டப் பந்தயங்களும் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பரமக்குடி, சின்னமனூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 268 புள்ளிகளைப் பெற்று தேனி யு எஸ் ஏ அத்தெலட்டிக் அகாடமி அணி முதலிடத்தைப் பெற்று சுழற் கோப்பையை வென்றது. பரமக்குடி அசூகரண் அணி 167 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பெற்று சுழற் கோப்பையை வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், பிசியோதெரபிஸ்ட் நந்தகுமாரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேனி யு எஸ் ஏ அத்தெலடிக் அகாடமி நிர்வாகிகள் வக்கீல் செல்வம், சேரலாதன், பரமேஸ், தலைமை காவலர் மணிமாறன் ஆகியோர் செய்தனர்.