fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொடியேற்றம், கருத்தரங்கு

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொடியேற்றம், கருத்தரங்கு

இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை நாடு முழுவதும் கூட்டுறவு வாரம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் சு.இராமகிருஷ்ணன் கூட்டுறவுக் கொடியேற்றி வார விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கூட்டுறவு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகள், கணினிமயமாக்கல் மற்றும் ERP நடை முறைப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலாண்மை இயக்குநர் சு.இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டு, டிஜிட்டல் சேவைகள் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img