fbpx
Homeபிற செய்திகள்கோவை கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்

கோவை கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்

கேபிஆர் நிறுவனங்களின் ஓர் அங்கமான, கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கு பெரும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்தந்த, துறை சார்ந்த சிறந்த வல்லுனர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வில் பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் துணை தலைவரும் ஆன டாக்டர் ஆர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த அமர்வில் பொரு ளாதார கோட்பாடுகள், திட்டமிடல் ஆணையம், ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகிய தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவும் பின்னர் அது சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி முதன்மை வழிகாட்டி டாக்டர் பாலுசாமி தலைமை தாங்கினார். இதில் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று வரும் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img