fbpx
Homeபிற செய்திகள்கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சமூக ஒருங்கிணைப்பு மாநாடு

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் சமூக ஒருங்கிணைப்பு மாநாடு

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம் மாள் மகளிர் கல்லூரியில் சமூக ஒருங்கிணைப்பு மாநாடு-2025 நடைபெற்றது. இம்மாநாடு பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் யூஜிசி-யின் ஆதரவுடன் இயங்கும் மகளிர் மையத்துடன் இணைந்து விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்த சமூக ஒருங் கிணைப்பு மாநாடு ஆகும்.

இது தொழில்நுட்ப எழுச்சிகளை எதிர்கொள்ள இளைஞர்களை வழிப்படுத்துதல் மற்றும் அறிவு, திறன்கள், இரக்கம், குடிமைப் பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் பி.பீ.ஹாரதி, கல்லூரிச் செயலர் முனைவர் என்.யசோதா தேவி ஆகிய இருவரும் தமது வாழ்த்துரையில், விருட்சம் என்பது கே.சி.டபிள்யூவின் ஒரு தனித்துவமான முயற்சி என்று எடுத்துரைத்தனர்.
விருட்சம் ஏற்பாடு செய்த இந்த மாநாடு வெறும் கல்விக் கூட்டம் மட்டுமல்ல, உண்மையிலேயே திட்டங் களைச் செயல்படுத்து வதற்கான அழைப்பாகும்.

பிரிகால் நிறுவனத் தலைவரும் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன், நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத் துவம் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோயம்புத்தூர் புற்றுநோய் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவ லரான டாக்டர் டி.பாலாஜி நாயுடு, நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் சமூக சுகாதார முயற்சிகளில் தனது முன்னனுபவம் குறித்து எடுத்துரைத்தார். காக்னி சண்ட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் இயக்குநர் பாலகுமார் தங்கவேலு, நிறுவனச்சிறப்பை அடி மட்ட வளர்ச்சியுடன் இணைக்கும் புதுமையான கட்டமைப்புகள் குறித்து விவா தித்தார்.
சிறப்பு விருந்தினர் பேச்சாளர், சென்னை, ரைட் டாட்ஸ் நிறுவனர் வித்யா போஜன், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.
இந்த மாநாடு நிறுவனங்கள், தொழில்துறை, சிவில் சமூகம் மற்றும் இளைஞர் களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் சக்திக்கு ஒரு சான்றாக அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img