fbpx
Homeபிற செய்திகள்மடக்கி வைக்கும் முதல் ‘ஸ்மார்ட் போன்’ டெக்னோ பேண்ட்டம விபோல்டு 5ஜி அறிமுகம்

மடக்கி வைக்கும் முதல் ‘ஸ்மார்ட் போன்’ டெக்னோ பேண்ட்டம விபோல்டு 5ஜி அறிமுகம்

ப்ரீமீயம் தொழில்நுட்ப பிராண்டான டெக்னோ, மடித்துவைக்கும் திறன் கொண்ட அதன் முதன் முதல் ஸ்மார்ட்போன் பேண்ட்டம் V ஃபோல்டு 5ஜி – ஐ, பூர்விகா மொபைல்ஸ் பிரை வேட் லிமிடெட் – ன் ஒத்துழைப்போடு, சென் னையில் அறிமுகம் செய் திருக்கிறது.

சென்னை கோடம் பாக்கம் பூர்விகா ப்ரீமியம் ஷோரூமில் கோலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.
‘Beyond the Extraordinary’ (அசாதாரணத்தையும் கடந்து) என்ற விருதுவா க்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேண்ட்டம் V ஃபோல்டு ஸ்மார்ட் போனின் மூலம் மடித்து வைக்கக்கூடிய மொபைல் சாதன சந் தையில் டெக்னோ நுழைந் திருக்கிறது.

ரூ.88,888 என்ற விலை கொண்ட பேண்ட்டம் V ஃபோல்டு 5ஜி, 7.85 2K+ LTPO என்ற மிகப்பெரிய டிஸ்பிளே உடன் இத்ª தாழில் துறையில் முதன் முறையாக முழு அளவிலான மடிக்கக்கூடிய திறன் வசதியுடன் வெளி வருகிறது.

இரட்டைத்திரை டிஸ்பிளே, 5-லென்ஸ்க ளுடன் கூடிய அல்ட்ரா ஹெச்டி கேமரா அமைப்பு ஆகிய அம்சங்களினால் நிகரற்ற அனுபவத்திற்கும், அற்புதமான நிழற்படத் தரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
மிகப்பெரிய 5000 mAh பேட்டரியுடன் ஆற்றல் செறிவு கொண்ட 45கீ சார்ஜர் உள்ளது.

டெக்னோ மொபைல் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் அரிஜித் தலபத்ரா கூறியதாவது: 40K முதல் 100K என்ற விலை வரம்பிற்குள் பேன்ட்டம் சீரிஸ் வழியாக அல்ட்ரா ப்ரீமியம் பிரிவில் எமது தயாரிப்புகளது அணிவரிசையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

தயாரிப்புகள் அனைத்துமே, பேன்ட் டம் சீரிஸ் உட்பட, இந்தியாவிலேயே பெருமை யுடன் தயாரிக்கப்பட்டவை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img