fbpx
Homeபிற செய்திகள்ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் கார்கள் விற்று சாதனை

ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் கார்கள் விற்று சாதனை

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டு களில் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்திய சந்தைக்கு ஏற்றவாறு ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தியது.

இந்த இரண்டு வகை கார்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இந்த மைல்கலலை அடைய நிறுவனத்துக்கு 6 ஆண்டுகள் தேவைப்பட்டது.

இந்த சாதனை விற்பனை குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் பெட்ர் ஜெனிபா கூறுகையில், “கடந்த 2022ல் சாதனைப் படைத்த பிறகு, 2023ம் ஆண்டில் எங்களது விற்பனை வேகத்தை தக்கவைத்து கொள்வது மிகவும் முக்கியமாக இருந்தது.

2023ல் எங்கள் நிலையை உறுதிப்படுத்த தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டோம். ஆண்டின் முதல் பாதியில் விநியோக சவால்கள் இருந்தபோதிலும், 2023 கடைசி காலாண்டில் நேர்மறையான முடிவுகளை உறுதி செய்துள்ளோம்“ என்றார்.

2022-ல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா 53,721 கார்களின் விற்பனையை பதிவு செய்தது. 2023ல் 48,755 கார்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. 2021ம் ஆண்டின் 3வது காலாண்டு மற்றும் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் குஷாக், ஸ்லாவியா புதிய அறிமுகங்கள் சாதனை படைத்தன. 2023ம் ஆண்டில் கோடியாக் மூலம் நிறுவனம் அதன் தயாரிப்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img