fbpx
Homeபிற செய்திகள்ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி வெற்றி

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி வெற்றி

தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில், சென்னை சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியின் ஸ்பாரோடெக் அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

ஸ்பாரோடெக் அணியானது சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் புத்தி கூர்மைமிக்க, தொழில் நுட்பம் மீதான அதிக ஆர்வமுடைய மாணவர்களை கொண்ட அணியாகும். இந்த அணி, தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று, உடல் தகுதி மற்றும் விளையாட்டு களத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை வழங்கியது.

ஸ்பாரோடெக் அணியின் புதுமையான தீர்வு, போட்டி நடுவர் குழுவின் கவனத்தை ஈர்த்ததுடன் நடைமுறை, செயல்திறனுக்கான பாராட்டையும் பெற்றது. சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு கல்வியுடன் கருத்தரங்கு, விளையாட்டு போட்டி, மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயார்படுத்துகிறது.

இது சிக்கல்களை ஆக்கப்பூர் வமாக தீர்க்கும் திறனை வழங்குகிறது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஸ்பாரோடெக் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

இது குறித்து சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் கூறுகையில், ‘’சிமாட்ஸ் பல்கலைக்கழக கற்றல் நடைமுறை, தொழில்பயிற்சி, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பு ஆகியவை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img