Homeபிற செய்திகள்கதிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

கதிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

வியல் கல்லூரியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் திறன் மேம்பாட்டு பயிலரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வனவிலங்கு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் வி.சிராஜுதீன் கலந்துகொண்டு சாலை விபத்துகளிலிருந்து வனவிலங்குகளை பாதுகாப்பது பற்றி மாணவர்களிடத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த உலகமானது மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டது இல்லை. அவை அனைத்து உயிர்களுக்குமாக படைக்கப்பட்ட உலகமாகும். ஆகையால் மனிதன் தன்னுடைய சுயலாபத்திற்காக வனவிலங்குகளை அழிப்பதும் கொல்வதுமாக வாழ்கிறான். அதிலும் குறிப்பாக இந்தியாவில் தான் அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன.

வேட்டையாடி கொல்லப்படும் விலங்குகளை விட சாலை விபத்துக்களால் கொல்லப்படும் விலங்குகள் தான் அதிகம். அதே சமயத்தில் நாம் உண்ணும் உணவினை காடுகளில் வாழுகின்ற வன உயிர்களுக்கு கொடுப்பதன் மூலம் உயிரினங்கள் அதற்கு அடிமையாக்கப்பட்டு அந்த உணவுகளைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது. இதனால் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கிறது. மக்களுக்கும் பல சிரமங்கள் நிகழ்கிறது.

இவை மட்டுமின்றி செல்பி எடுத்தல், குடித்துவிட்டு மது பாட்டல்களை காடுகளுக்குள் எறிதல், எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருட்களைப் எடுத்துச் செல்வது, பிளாஸ்டிக் கழிவுகளை காடுகளுக்குள் கொட்டுவது, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி காடுகளுக்குள் திம்பட்டங்களை வீசி எறிவது, போன்ற காரணங்களாலும் அதிகமான விபத்துக்கள் உயிர் பலிகள் நிகழ்கின்றன.

அதனால் மாணவர்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பதனால் மட்டுமே வன உயிர்களும் காடுகளும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இவ்விழாவில் கதிர் கல்வி நிறுவனத்தின் தலைவர் ஈ.எஸ்.கதிர், செயலர் லாவண்யா கதிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் டாக்டர் ஆர்.கற்பகம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வினை முதுகலை வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜோதி மற்றும் தமிழ்த் துறையின் அறிவியல் புலத்தின் துறைத் தலைவர் பொ.பிரகாஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img