fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா

புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , மேட்டுப்பாளையம் புத்தகத் திருவிழா வரவேற்பு குழு , கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சியை மேட்டுப்பாளையத்தில் நடத்தியது.

வரும்  ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை பத்து நாட்கள் மேட்டுப்பாளையத்தில் நான்காம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது . இதற்காக வரும் மாதம் முழுவதும் வாசித்தலை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்த அடிப்படையில் கல்வி வளர்ச்சி  நாள்  கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு புத்தகத் திருவிழா வரவேற்பு குழுத்தலைவரும், நகர மன்ற தலைவருமான மெஹரிபர பர்வீன் தலைமை தாங்கினார்.

புத்தக திருவிழா வரவேற்பு குழு செயலாளர் வழக்கறிஞர் மஸ்தான் வரவேற்றார். 

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர்

A.பாலசுப்ரமணியன் புத்தகத் திருவிழாக்களின் அவசியம் குறித்து பேசினார்.  கூட்டத்தின் நோக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முகமது பாதுஷா மற்றும் மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட ஆட்சியர் . . கிராந்திகுமார் பாடி , புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினார். 

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், ” மாவட்ட தலைநகரங்களைத் தாண்டி மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடப்பது வரவேற்கத்தக்க ஒன்று. என்றும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் , புத்தகத் திருவிழாவை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

விழாவில் சிறப்பான தேர்ச்சியை கொடுத்த 170 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார். அதேபோல சாதித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு பரிசளித்தார் மேலும் விழாவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வர்களை ஊக்கப்படுத்தி பாராட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, 20000 மாணவர்களுக்கு புத்தக சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட உள்ளது. இந்த  

 உண்டியலில் சேமித்து பணத்தை கொண்டு மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவார்கள். இதனால் மாணவர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும்.

நஞ்சையா லிங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை ஒய்ஸ்மேன்  சங்கத்தினர் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

புத்தகத் திருவிழா வரவேற்பு குழுவைச் சேர்ந்த ராஜாமணி  எம்.சு. மணி, ஹெச்.பி. ஹம்சா, ரிஷி சரவணன், அன்சர் அலி ,   ராஜேந்திரன், மருத்துவர் அரவிந்த் விஷால் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

கூட்டத்தை மாநில செயலாளர் மஹபுநிஷா ஒருங்கிணைத்தார். இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் மணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img